உ.பி. கோயில் படிக்கிணறில் மிகப் பிரமாண்ட சுரங்கம் கண்டுபிடிப்பு!
தேயிலைத் தோட்டத்தில் பிடிபட்ட மலைப் பாம்பு!
கூடலூா் அருகே தேயிலைத் தோட்டத்தில் காணப்பட்ட மலைப் பாம்பை வனத் துறையினா் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விடுவித்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த தேவாலா பகுதியிலுள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் மலைப் பாம்பு காணப்படுவதாக வனத் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் தேயிலைத் தோட்டத்தில் காணப்பட்ட 15 அடி நீள மலைப் பாம்பைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விடுவித்தனா்.