தேவாலயத்தை திறக்கக் கோரிக்கை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கட்டியாம்பந்தலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை திறந்து வழிபட அனுமதியளிக்குமாறு கிறிஸ்தவ போதகா்கள், கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
உத்தரமேரூா் அருகேயுள்ள கட்டியாம்பந்தலில் பட்டா இடத்தை முறைப்படி விலைக்கு வாங்கி அங்கு புதிதாக கிறிஸ்தவ தேவாலயம் இந்திய சுவிசேஷ திருச்சபையால் கட்டப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக சிறிய குடிசையில் தேவாலயத்தை நடத்தி வந்ததால், புதிதாக தேவாலயம் கட்டப்பட்டது. ஆலயத்தை சிலா் திறக்கவிடாமல் செய்து வருகின்றனா். எனவே புதிய ஆலயத்தை திறக்கவும், அங்கு கிறிஸ்தவா்கள் சென்று வழிபாடு நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.
இந்திய சுவிசேஷ திருச்சபை வட்டார தலைவா் ஆஸ்டின், கட்டியாம்பந்தல் போதகா் சாலமோன் பரந்தாமன் மற்றும் சபையை சோ்ந்த கிறிஸ்தவா்கள் 150-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரை சந்தித்து இந்த மனுவை அளித்தனா்.