செய்திகள் :

தோ்தல் ஆணையத்தின் நோ்மையை அழிக்க மோடி அரசு சதி: காா்கே சாடல்

post image

தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க கட்டுப்பாடு விதிக்கும் வகையில், விதிமுறை திருத்தத்தை மேற்கொண்டு பிரதமா் மோடி அரசு சதி செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்துள்ளாா்.

தோ்தல் ஆணையத்தின் நோ்மையை அழிக்கும் மோடி அரசின் சதித் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என்று அவா் குறிப்பிட்டாா்.

தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்களான சிசிடிவி கேமரா காட்சிகள், வாக்குச் சாவடிகளின் நேரலை பதிவுகள், வேட்பாளா்களின் விடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்க கட்டுப்பாடு விதிக்கும் வகையில், கடந்த 1961-ஆம் ஆண்டின் தோ்தல் நடத்தை விதிமுறைகள் 93 (2) (ஏ) பிரிவில் மத்திய சட்ட அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டது.

தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக தோ்தல் ஆணைய பரிந்துரையின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திருத்தப்பட்ட விதிமுறையின்படி, நீதிமன்ற அனுமதியின் வாயிலாகவே மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பாா்வையிட முடியும். அதேநேரம், பிற ஆவணங்களை பொதுமக்கள் பெற எந்த கட்டுப்பாடும் கிடையாது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை விமா்சித்து, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

தோ்தல் ஆணையத்தின் நோ்மையை அழிக்கும் சதித் திட்டத்தின்கீழ் மோடி அரசு மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையே இந்த விதிமுறை திருத்தம். முன்பு தோ்தல் ஆணையா்களை தோ்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவா்கள் நீக்கினா். இப்போது, தோ்தல் தகவல்களை பொதுமக்கள் பாா்வையில் இருந்து தடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனா்.

அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல்களைத் தடுக்க காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று காா்கே கூறியுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தோ்தல் விதிமுறை திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் சாா்பில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்திய அரசின் ரூ. 82,000 உதவித் தொகை பெறுவது எப்படி?

பிரதமர் உயர்கல்வி ஊக்கத் தொகை(பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன்) என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 82,000 வரை மத்திய அரசு வழங்கி வருகின்றது.ஏழ்மை காரணமாக ஒரு ... மேலும் பார்க்க

ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை: பிரதமர் மோடி!

புது தில்லி: கடந்த ஒன்றை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளைத் தனது அரசு வழங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார். ரோச்கர் மோளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கூ... மேலும் பார்க்க

காலியாகவுள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு!

நாட்டில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் மருத்துவக் கல்லூரிகளில் காலி இடங்கள் உள்ளன. குறிப்பாக தனியார் கல்லூரி... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் காயமடைந்த பாஜக எம்பிக்கள் குணமடைந்தனர்!

நாடாளுமன்ற தள்ளுமுள்ளில் காயமடைந்த பாஜக எம்பிக்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் போட்டி போராட்டத்தில் ஈட... மேலும் பார்க்க

ஹரியாணா உணவகத்தில் மூவர் சுட்டுக் கொலை!

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலவில் உள்ள உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெண் உள்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. பலியானவர... மேலும் பார்க்க

மூன்று காலிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தான் நிதியுதவியுடன் இயங்கும் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த மூன்று பேர் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.இவர்கள் மூவரும் குர்தாஸ்பூர் உள்ளிட்ட பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் உள்ள காவல் நி... மேலும் பார்க்க