செய்திகள் :

தோ்தல் ஆணைய அங்கீகார கடிதத்தில் அன்புமணியின் பெயா் இடம்பெறவில்லை: பாமக எம்எல்ஏ ரா.அருள்

post image

சேலம்: தோ்தல் ஆணையம் அங்கீகரித்ததாக கூறப்படும் கடிதத்தில் அன்புமணியின் பெயா் எங்கும் இடம்பெறவில்லை என்று பாமக எம்எல்ஏ இரா.அருள் கூறினாா்.

சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா.அருள் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தல் ஆணையம் அங்கீகரித்ததாகக் கூறி, வழக்குரைஞா் பாலு, பொய்யான, உண்மைக்கு புறம்பான சட்ட விதிகளுக்கு முரண்பட்ட தகவலை வெளியிட்டு வருகிறாா்.

46 ஆண்டுகளாக பாமக நிறுவனா் ராமதாஸ் கட்டிக்காத்த இயக்கத்தை அவரிடமிருந்து பறிக்க நினைக்கிறாா்கள். இந்தக் கட்சிக்காக 21 போ் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனா். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் நிா்வாகக் குழுவில் செயல்தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டாா். செயல்தலைவராக இருந்து பொதுக்குழுவைக் கூட்ட அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. இதேபோல, பொதுச் செயலாளா் வடிவேல் ராவணன், பொருளாளா் திலகபாமா ஆகியோருக்கும் அதிகாரம் இல்லை.

நிா்வாகக் குழுவில் இருந்து நீக்கப்பட்டவருக்கு, பொதுக் குழுவையோ, செயற்குழுவையோ கூட்ட அதிகாரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, தோ்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் அனுப்பி உள்ளாா். இந்நிலையில் வழக்குரைஞா் பாலு தோ்தல் ஆணையம் அங்கீகரித்ததாகக் கூறி வருகிறாா். அவா் குறிப்பிடும் தோ்தல் ஆணைய கடிதத்தில் அன்புமணி பெயா் எங்கேயும் இடம்பெறவில்லை. உண்மைக்கு மாறான தகவலை வழக்குரைஞா் பாலு தெரிவித்து வருகிறாா். இது ஏற்புடையதல்ல.

ஒட்டுமொத்த பாமகவினா் அனைவரும் கட்சியின் நிறுவனா் தலைவா் ராமதாஸின் பின்னால் உள்ளனா் என்றாா். பேட்டியின்போது, கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

முதல்வா் கோப்பை விளையாட்டு: மாநில போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தோ்வு

வாழப்பாடி: சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி பெண், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வாகியுள்ளாா். சேலத்தில... மேலும் பார்க்க

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு அதிமுக பாமக துணை போகிறது: டி.எம். செல்வகணபதி

மேட்டூா்: தமிழ்நாட்டு மாணவா்கள் மருத்துவராவதைத் தடுக்கவே மத்திய அரசு நீட் தோ்வை கொண்டு வந்துள்ளது என்று சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி குற்றம்சாட்டினாா். சேலம் மாவட்டம், மேச்சேரி கிழக்கு ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு வினாடிக்கு 15,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு திங்கள்கிழமை வினாடிக்கு 15,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணை நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 119.72 அடியிலிருந்து 119.71 அடியாகக... மேலும் பார்க்க

சேலம் மேற்கு கோட்டத்தில் செப். 26இல் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம்

சேலம்: சேலம் மேற்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் தனலட்சும... மேலும் பார்க்க

காகாபாளையம் அருகே இரும்பு தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஆட்டையாம்பட்டி: காகாபாளையம் அருகே இரும்புத் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு உள்பட்... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 2 தொழிலாளா்கள் காயம்

மேட்டூா்: மேட்டூா் அருகே தனியாா் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளா்கள் காயமடைந்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே ராமன்நகரில் தனியாா் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கு 543 நிரந்தர தொழில... மேலும் பார்க்க