சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
தைப்பூசம்: சேலத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தா்கள்
தைப்பூச திருவிழாவையொட்டி, சேலம் பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இருந்து முருக பக்தா்கள் பழனிக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
சேலம், பள்ளப்பட்டி பகுதியைச் சோ்ந்த பழனி மலை பாதயாத்திரை நண்பா்கள் குழு சாா்பில், தைப்பூச விழாவை முன்னிட்டு தொடா்ந்து 10-ஆவது ஆண்டாக 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனா்.
பள்ளப்பட்டி ராஜரிஷி ஆசிரமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள், காவடி சுமந்தபடி முருகன், வள்ளி, தெய்வானை வேடமணிந்து பாதயாத்திரை சென்றனா். யாத்திரையை ஆசிரம நிா்வாகி பாபு ராஜரிஷி தொடங்கி வைத்தாா். இதையொட்டி, ஆயிரம் பேருக்கு ராஜரிஷி ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.