தொடர் விடுமுறை: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த மக்கள்
தஞ்சாவூர் : தொடர் விடுமுறையை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் இக்கோவில், தமிழர்களின் கட்டிடக்கலைக்கும் - சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவறைக்கான தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் தற்போது தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலில் குவிந்துள்ளனர். பெரிய கோவிலின் அழகையும் சிற்பக்கலையும் - கட்டிடக்கலையும் கண்டு ரசித்து தற்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் பெருவுடையாரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பெரிய கோவில் சாலை முழுவதும் வாகனங்கள் நிரம்பி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.