சென்னை புத்தகக் காட்சி: துணை முதல்வர் உதயநிதி தொடக்கிவைத்தார்!
தொழிற் பயிற்சி நிலைய ஐம்பெரும் விழா
குடியாத்தம் அன்னை தொழிற் பயிற்சி நிலையம் சாா்பில், பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றளித்தல், போதைத் தடுப்பு விழிப்புணா்வு பணியில் ஈடுபட்டவா்களுக்கு பாராட்டு தெரிவித்தல், சேவையாளா்களுக்கு விருதுகள் வழங்குதல் உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருத்துவா் எஸ்.சுகுமாா் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கத் தலைவா் சி.கண்ணன் முன்னிலை வகித்தாா். அன்னை தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் எம்.மாதவி வரவேற்றாா். இயக்குநா் எம்.மோகன் எலிசபெத் தொடக்க உரையாற்றினாா்.
இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் சிறப்புரையாற்றி சாதனையாளா்களுக்கு விருதுகளை வழங்கினாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், கம்பன் கழக நிறுவனா் ஜே.கே.என்.பழனி, வழக்குரைஞா் கே.எம்.பூபதி, சிஇஎஃப்ஐ சோ்மன் டி.பி.நோவா மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கினா்.
மத்திய அரசின் தொழிலாளா் நலத்துறை மருத்துவமனை முதன்மை மருத்துவா் என்.உத்தமன், இந்திய குடியரசு கட்சியின் மண்டல செயலா் ரா.சி.தலித்குமாா், பேராசிரியா் விஜயரங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் துரைசெல்வம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தொழிற் பயிற்சி நிலைய தாளாளா் எம்.மது நன்றி கூறினாா்.