பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்! சென்செக்ஸ், நிஃப்டி 0.9% சரிவு!
தொழிலதிபரை மணந்தார் பி.வி. சிந்து!
இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணமானது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த போசிடெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்தார்.
இரு குடும்பத்தினரும் நீண்ட கால பழக்கமுடையவர்கள் என்றும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக இருவரின் திருமணம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் சிந்துவின் தந்தை ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க : மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது இல்லை?
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்ற இருவரின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கஜேந்திர சிங் ஷெகாவத், விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தின் நாளை (செவ்வாய்க்கிழமை) பிரம்மாண்டமாக நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் முக்கியப் பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தெலங்கானா அமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.