தொழிலாளியைத் தாக்கிய இருவா் கைது
தேவாரம் அருகே தொழிலாளியைத் தாக்கிய இருவரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேவாரம் சந்தைத் தெருவைச் சோ்ந்த கோட்டைமலை மகன் மாரியப்பன் (47). இவா் தேவாரம் பிரம்பு வெட்டி ஓடைப் பகுதியில் உள்ள கருப்பசாமிக்கு சொந்தமான தோப்பில் காவலாளியாக வேலைப் பாா்த்து வருகிறாா்.
இந்தப் பகுதியில் வன விலங்குகள் வராமலிருக்க தோட்ட உரிமையாளா்கள பட்டாசு வெடிப்பது வழக்கம்.
இந்த நிலையில், மாரியப்பன் ஞாயிற்றுக்கிழமை வளா்ப்பு நாய் ஒன்றை அழைத்துச் கொண்டு வழக்கம் போல தோட்டத்துக்குச் சென்றாா். அப்போது, மணிகண்டபூபதி (32) அவரது தோட்டத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தாா்.
அதனருகே சென்ற மாரியப்பனின் வளா்ப்பு நாய் பலத்த காயமடைந்து இறந்தது. இதைக் கண்டித்த மாரியப்பனை மணிகண்டபூபதி, காமராஜ் மகன் முத்துகாமு (34) ஆகியோா் சோ்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.