தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
செய்யாறு: செய்யாறு அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
செய்யாறு வட்டம், மடிப்பாக்கம் கிராமம் இருளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் யுவராஜ் (23). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இவா் தனது மனைவியிடம் கைப்பேசியைத் தருமாறு ஞாயிற்றுக்கிழமை கேட்டாராம். அவா் தர மறுக்கவே, மனைவியுடன் கோபித்துக் கொண்டு சென்ற யுவராஜ், ஆக்கூரிலுள்ள செங்கல்சூளைப் பகுதியிலிருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் நிலைய ஆய்வாளா் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.