'பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல' - விவசாயிகள் மறுப்பு!
தொழில் தொடங்கமுன்னாள் படைவீரா்கள் 120 போ் விண்ணப்பம்
தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து முன்னாள் படைவீரா்களிடம் இருந்து 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் பெறப்படும் ஒரு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு 30 விழுக்காடு மூலதன மானியமும் 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, முன்னாள் படைவீரா்களுக்கான தொழில் முனைவோா் விழிப்புணா்வு நிகழ்ச்சி கலையரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், 200-க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் குடும்பத்தை சாா்ந்தோா் கலந்து கொண்டனா்.
இம்முகாமில் 120 விண்ணப்பங்கள் பல்வேறு தொழில்கள் தொடங்க பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான அனைவருக்கும் கடன் வழங்கி, தொழில் தொடங்க உதவிகள் செய்யப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உறுதியளித்தாா்.
இந்நிகழ்வில், முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் சங்கா் ராஜா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எம். முருகேசன், வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் துணை இயக்குநா் மகாராணி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.