Trump: 'யாராவது இதில் கையெழுத்திடுவார்களா?!' - தன்னை தானே சாடிய ட்ரம்ப்!
நில அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இனி, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை சமா்பித்து வந்த நிலையில் வட்ட
அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்த நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது இச்சேவையை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொது சேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நில உரிமைதாரா்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொது சேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின்னா் மனுதாரா் மற்றும் நிலஅளவா் கையொப்பமிட்ட அறிக்கை வரைபடம் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரா் இணையவழிச்சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.