செய்திகள் :

கும்பமேளாவில் பெண்கள் நீராடும் விடியோவை பதிவிட்ட யூடியூபர் கைது!

post image

மகா கும்பமேளாவில் நீராடும் பெண்களை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியூபரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்றது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் ஜன. 13 முதல் பிப். 26 வரை 65 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.

இதையும் படிக்க : புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!

இந்த நிலையில், திரிவேணி சங்கமத்தில் பெண்கள் நீராடுவதை விடியோவாக பதிவிட்டு ஆயிரக்கணக்கில் சமூக ஊடகங்களில் விற்கப்படும் சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச சைபர் போலீஸார் சமூக ஊடகங்களில் இருக்கும் விடியோக்களை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், விடியோக்களை பதிவிடும் கும்பலை தேடி வந்தனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி பகுதியைச் சேர்ந்த அமித் குமார் என்ற யூடியூபரை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிஎன்எஸ் 296/79 மற்றும் சைபர் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யூடியூபில் அதிக பின்தொடர்பாளர்களை பெறுவதற்கும் பணம் சம்பாதிப்பதற்காகவும் பெண்களின் விடியோக்களை பதிவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மணிப்பூர்: ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிப்பு!

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் ஆளுநர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் கடந்த பிப். 13 முதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது. இங்கு கலவரம் மற்று... மேலும் பார்க்க

பெங்களூரு விமான நிலையத்தில் காவலரை தாக்கிய வெளிநாட்டவர் கைது!

பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில்படையைச் சேர்ந்த வீரரை தாக்கிய வெளிநாட்டுப் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவரை விமானத்தில் செல... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து வந்த மிரட்டல்... மகாராஷ்டிர முதல்வரின் பாதுகாப்பு அதிகரிப்பு!

மகாராஷ்டிர முதல்வருக்கு பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து மிரட்டல் செய்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்த ... மேலும் பார்க்க

நகைக் கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! ரிசர்வ் வங்கியின் புதிய விதி!!

நகைக் கடன் வாங்கியவர்கள், அதற்கான அவகாசம் முடிந்ததும் அதனை வட்டி மட்டும் கட்டி மறு அடமானம் வைப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்துவிட்டது.பொதுவாக வங்கிகளில் நகையை அடமானமாக வைத்து பணம் வாங்குவதுதான் நகைக்கடன்... மேலும் பார்க்க

தில்லி சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த கூட்டத்தில் ரேகா குப்தா பங்கேற்பு!

உள்துறை அமைச்சகத்தின் வடக்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் தில்லி முதல்வர் ரேகா குப்தா வருகை தந்துள்ளார். தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மறு ஆய்வு செய்வதற்காக ... மேலும் பார்க்க

ட்ரோன்கள்.. மோப்ப நாய்கள்.. 100 போலீஸ்..! புணே வன்கொடுமை குற்றவாளி சிக்கியது எப்படி?

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 75 மணி நேரத்தில் காவல்துறையினர் குற்றவாளியைப் பிடித்துள்ளனர்.வன்கொடுமைபுணேயின் ஸ்வா்கேட் பேருந... மேலும் பார்க்க