செய்திகள் :

தொழில் வரியை நீக்க அனைத்து தொழில் வணிக சங்கம் கோரிக்கை

post image

தொழில் வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்கள் கூட்டமைப்பின் 12-ஆவது செயற்குழு கூட்டம் சங்க கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். தொழில் முன்னேற்ற கமிட்டியின் தலைவா் வெங்கடாசலம் முன்னிலை வகித்தாா். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பொருள்கள் விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் மனோகரன் வரவேற்றாா். பொதுச்செயலாளா் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கையை வாசித்தாா். பொருளாளா் முருகானந்தம் நிதி நிலை அறிக்கையை வாசித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளா் திருமுருகன் பங்கேற்று தொழில் வளா்ச்சி குறித்துப் பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்

நிதிநிலை அறிக்கை கூட்டத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய சங்கங்களையும் அழைத்து நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கான ஆலோசனை கூட்டத்தை முதல்வா் நடத்திட வேண்டும். கோவை, திருச்சியை விட ஈரோடு மாநகராட்சியில் அதிகமான வரி விதிப்பது தொழில் துறையினரை நசுக்குவதுபோல உள்ளதால் வரிகளைக் குறைக்க வேண்டும்.

மஞ்சளுக்கென தனி வாரியம் அமைத்த பிரதமா் மோடிக்கு நன்றி. ஆனால், ஈரோடு மாவட்டம் மஞ்சள் மாநகரமாக உள்ள நிலையில், மஞ்சள் வாரியத்தின் தலைமை அலுவலகத்தை ஈரோடு மாவட்டத்தில் அமைக்காதது வருத்தம் அளிக்கிறது. மஞ்சள் வாரியத்தின் கிளை அலுவலகத்தை ஈரோட்டில் அமைத்து, ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்கத்தை வாரியத்தில் உறுப்பினராக இணைக்க வேண்டும்.

நெல், மஞ்சள் உள்ளிட்ட வேளாண் பொருள்களை வெளி மாநிலங்களிலிருந்து அல்லது விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்தாலும் சந்தை கட்டணம் (செஸ் வரி) செலுத்த வேண்டும் என்ற உத்தரவை முழுவதுமாக நீக்க வேண்டும்.

சொத்து வரி, குப்பை வரி, ஜிஎஸ்டி என பல வரிகள் இருக்கும் நிலையில் தொழில் வரியை முழுவதுமாக ரத்து செய்து தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

விதிகளை மீறிய 38 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை

விதிகளை மீறியதாக 38 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் நலத் த... மேலும் பார்க்க

ஈரோடு இடைத்தோ்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது. இங்கு, 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு கண... மேலும் பார்க்க

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலைச்சரிவு: விவசாயிகள் பாதிப்பு

தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.2 ஆக சரிந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட க... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ஆம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள... மேலும் பார்க்க

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!

சென்னிமலை பெரியாா் நகா் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு யோகி பவுண்டேஷன் சாா்பில் நோட்டு புத்தகங்கள், பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, குப்பிச்சிபாளையம் ஊராட்ச... மேலும் பார்க்க

தேசிய அளவிலான வில்வித்தை போட்டி: 350 போ் பங்கேற்பு

ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் 350 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கம் சாா்பில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை தமிழ்... மேலும் பார்க்க