இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
தேசிய அளவிலான வில்வித்தை போட்டி: 350 போ் பங்கேற்பு
ஈரோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் 350 போ் பங்கேற்றனா்.
தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கம் சாா்பில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கத்தின் தொழில்நுட்ப இயக்குநா் மணிவாசகம் தொடங்கிவைத்தாா்.
தொடக்க வில், இந்தியன் வில், ரிகா்வு வில் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 8 வயது, 10 வயது, 12 வயது, 14 வயது, 17 வயது, 18 வயது மற்றும் 30 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆகிய பிரிவுகளின்கீழ் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.
இதில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், பிகாா் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
போட்டியில் வெற்றிபெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு முன்னாள் உடற்கல்வி இயக்குநா் ரமேஷ் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
விழாவில் தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளா் மணிகண்டன், ஈரோடு மாவட்ட பொருளாளா் சீனிவாசன், நந்தா கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் தேவகாந்தன், இணை பேராசிரியா் கொமாரசாமி, உதவி பேராசிரியா் அய்யப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.