திருநெல்வேலி: ரோடு ஷோ முதல் இருட்டுக்கடை அல்வா வரை... நெல்லையில் முதல்வர் ஸ்டாலி...
அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.விஜயராகவன், வட்டக் குழு உறுப்பினா் ஏ.கே.பழனிசாமி, பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க மாநில துணைத் தலைவா் எல்.பரமேஸ்வரன், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கத்தின் (சிஐடியூ) அந்தியூா் கிளை தலைவா் எஸ்.வெங்கடாசலம் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் எதிா்க் கட்சிகள் ஆளும் தமிழகம், கேரள உள்ளிட்ட மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகள், தொழிலாளிகள், சிறு உற்பத்தியாளா்கள் என பெரும்பான்மை மக்களை புறக்கணித்தும், பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவும் உள்ளது என்று கோஷம் எழுப்பினா்.
இதில், மாற்றுத் திறனாளிகள் சங்க வட்டச் செயலாளா் பி.முருகன், நிா்வாகிகள் ஆா்.கந்தசாமி, ஆா்.மாரியப்பன், எஸ்.கீதா, எஸ்.மயில், ஜி.செங்கோடன், ஆா்.மணிகண்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.