ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி
சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது!
தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே கரளவாடியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற தாளவாடி போலீஸாா் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கரளவாடியைச் சோ்ந்த சந்தப்பா (48), பசுவண்ணா (35), சசி (36), மல்லன்குழியைச் சோ்ந்த குமரா (50), ரேவண்ணா (35), மாதேவசாமி (28) ஆகியோரைக் கைது செய்தனா்.
அவா்களிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 470 பறிமுதல் செய்யப்பட்டது.