“சிறுபான்மையினருக்கு அரணாக உறுதியாக நிற்போம்!” -முதல்வர் மு.க.ஸ்டாலின்
தோனி போல திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்..! முன்னாள் வீரர் விமர்சனம்!
தோனியை போலவே தொடருக்கு இடையில் தனது ஓய்வை அஸ்வின் அறிவித்திருக்கக் கூடாது என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
38 வயதாகும் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது இந்திய ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல் டெஸ்ட்டில் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாடினார். 2ஆவது டெஸ்ட்டில் ரோஹித் கேப்டனான பிறகு மீண்டும் அஸ்வின் விளையாடினார்.
இதையும் படிக்க:இந்தத் தொடரில் நான் தேவைப்படாவிட்டால் விலகிக் கொள்கிறேன்: அஸ்வின்
3ஆவது போட்டியில் அஸ்வின் மீண்டும் பிளேயிங் லெவனில் இல்லை. இந்த நிலையில் அவரது ஓய்வு முடிவு இந்தியாவுக்கு நல்லதல்ல என முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
சுனில் கவாஸ்கர் கூறியதாவது:
இந்தத் தொடருக்கு பிறகு ஓய்வு பற்றி அஸ்வின் தெரிவித்திருக்கலாம். தோனியை போலவே தொடருக்கு இடையில் தனது ஓய்வை அறிவித்தார்.
அணியின் தேர்வர்கள் பலரையும் ஒவ்வொரு காரணங்களுக்காக அணியில் தேர்ந்தெடுக்கிறார்கள். யாருக்காவது காயம் எனில் மாற்று வீரர்களை பயன்படுத்துவார்கள்.
சிட்னியில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு முக்கியமான பங்கிருக்கும். அதனால் இந்திய அணி இரண்டு சுழல்பந்து வீரர்களுடன் விளையாட வேண்டும். நமக்கு தெரியாது. அஸ்வின் அங்கு தேவைப்பட்டிருக்கலாம்.
மெல்போர்னில் ஃபிட்ச் எப்படி இருக்குமென எனக்குத் தெரியாது. எப்போதும் தொடரின் இறுதியில் சொல்லுவதுதான் சரியாக இருக்கும். இடையில் ஓய்வை அறிவிப்பது சரியாகாது.
அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இருக்கிறார். நாளை அஸ்வின் விமானத்தில் சென்னை கிளம்பிடுவாரென ரோஹித் தெரிவித்துள்ளார். அதனால், இத்துடன் அஸ்வினின் சர்வதேச போட்டி முடிவுக்கு வருகிறது. அஸ்வின் ஒரு சிறந்த கிரிக்கெட்டர் என்றார்.
எம்.எஸ்.தோனி 2014, டிச.30ஆம் நாள் இதேமாதிரி 3ஆவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வை அறிவித்தார்.
அஸ்வின் 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவில் விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.