Ajmer Sharif: `அஜ்மீர் தர்காவில் சிவன் கோயில்?' - இந்து சேனாவின் மனுவும் நீதிமன்...
தோல்வியடைந்தால் அழ வேண்டியது; வெற்றி பெற்றால் காங்கிரஸுடைய வெற்றி!! பாஜக விமர்சனம்!
தேர்தல்களில் தோல்வியடைந்தால் இயந்திரங்கள் மீது காங்கிரஸ் குறை சொல்வதாக பாஜக விமர்சித்துள்ளது.
மகாராஷ்டிரம், ஹரியாணா தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி ஏற்படுத்தப்பட்டதாக, தில்லியில் செவ்வாய்க்கிழமை (நவ. 26) சம்விதான் ரக்ஷக் அபியான் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜக மீது குற்றம் சாட்டினார். இந்த நிலையில், கார்கேவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த பாஜக, தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
பாஜக, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ``அவர்கள் தோல்வியடைந்து விட்டால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி என்று அழுகின்றனர். ஆனால், அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால், அது காங்கிரஸுடைய வெற்றி என்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்னை இல்லை; காங்கிரஸாரின் நோக்கங்கள்தான் மோசமானவை’’ என்று கூறியுள்ளனர். இந்த எக்ஸ் பதிவுடன் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி வெற்றியைக் கொண்டாடும் படமும் இணைக்கப்பட்டிருந்தது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த கார்கேவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பாஜக எம்.பி.யும் தேசிய செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா கூறியதாவது, ``பிரச்னை இயந்திரத்தில் இல்லை; பிரச்னை காங்கிரஸ் தலைமையில்தான் உள்ளது. இயந்திரம் சரியாகத்தான் உள்ளது; ராகுல்தான் சரியில்லை. அவரை மாற்றுங்கள். செவ்வாய் கிரகம்தான் உங்களுக்கு மிகவும் பொருத்தமான இடம் என்று நினைக்கிறேன். அங்குதான் யாரும் இல்லை. நீங்கள் ராகுலுடன் அங்கு சென்று விடுங்கள்’’ என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் பேரவைத் தேர்தலில் 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்துள்ளன.
ஆனால், பேரவையில் எதிர்க்கட்சித் தலைவா் அந்தஸ்தை பெறும் அளவுக்கு கூட எந்தவொரு எதிர்க்கட்சியும் வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனை (உத்தவ்) கட்சி 20, காங்கிரஸ் 16, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி 10, சமாஜவாதி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி 1 என 50 இடங்களே கிடைத்தன.
இதையும் படிக்க:எந்தப் பங்குகளை வாங்கலாம்? சிறந்த 5 பங்குகள்!