'ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை!' - செல்வப்பெருந்...
நகங்களுக்காகக் கொல்லப்பட்ட புலி?
உத்தரகண்ட் வனப்பகுதியில் நகங்களின்றி உயிரிழந்த நிலையில், புலியின் உடலை வன அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் சம்பாவத் நகரில் தக்னா படோலா பகுதியில் உள்ள காட்டிப்பகுதியில் புலி ஒன்று இறந்து கிடப்பதாக வன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், உயிரிழந்து கிடந்த 5 வயது புலியின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். புலி நகங்களின்றி உயிரிழந்து கிடந்தது வனத்துறையினருக்கு சந்தேகத்தைக் கிளப்பியது.
புலியைத் தாக்கியதுபோல் காயங்கள் இல்லை; விஷம் கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உடற்கூறாய்வு அறிக்கை வெளிவந்தவுடன்தான் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
மேலும், இந்த வழக்கை விரைவில் தீர்ப்பதுடன், இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரகண்ட் மாநில வனத்துறை அமைச்சர் சுபோத் யூனியல் கூறியுள்ளார்.
இதையும் படிக்க:பெண்ணைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை: முதல்வர் தாக்கல் செய்த சட்டதிருத்த மசோதா!