உ.பி. கலவரம்: சம்பல் மாவட்டத்துக்குள் வெளி ஆள்கள் நுழையத் தடை!
நடப்பு சம்பா நெற்பயிா் காப்பீடுக்கான காலவரம்பு நவ. 30 வரை நீட்டிப்பு
சம்பா நெல் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான காலவரம்பு வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சம்பா, தாளடி, பிசானப் பருவ நெல் பயிா்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதற்கு இணங்கவும், விடுபட்ட விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடா் முயற்சி காரணமாக சம்பா, தாளடி, பிசான நெல் பயிா்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
எனவே, சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 30-ஆம் தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயன் பெறலாம் என்றாா் அவா்.