செய்திகள் :

நடிகரானார் டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்!

post image

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி, சூர்யா, நானி, இயக்குநர் ராஜமௌலி என பலரும் பாராட்டினார்கள்.

இந்தப் படம் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது.

இந்நிலையில், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் இவர் சத்யா எனும் கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார்.

மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக மோனிஷா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதை யார் இயக்குகிறார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சாம் சிஎஸ் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tourist Family director Abhishan Jeevinth has made his debut as a hero.

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் உருவாகி வரும் “மண்டாடி” திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூரி மற்றும... மேலும் பார்க்க

கடலுக்கு அடியில் வெளியிடப்பட்ட திரௌபதி - 2 முதல் பார்வை!

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும், திரௌபதி - 2 திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் கடலுக்கு அடியில் வெளியிட்டுள்ளனர். இயக்குநர் மோகன் ஜி மற்றும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஆகியோரது கூட... மேலும் பார்க்க

இதை செய்யாவிட்டால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை! ஃபிஃபா எச்சரிக்கை!

இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடைவிதிக்கப்படும் என ஃபிஃபா எச்சரித்துள்ளது. இத்துடன் ஆசிய கால்பந்து கூட்டமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. என்ன பிரச்னை? இந்திய கால்பந்து கூட்டமைப்பு புதிய விதிகளை அ... மேலும் பார்க்க

மறுவெளியீடாகும் ரன்!

நடிகர் மாதவனின் ரன் திரைப்படம் மறுவெளியீடாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரன்.காதல் -... மேலும் பார்க்க

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் ஹரிஷ் கல்யாண் லப்பர் பந்து திரைப்படத்திற்குப் பின் நடித்த திரைப்படம் டீசல். ஆக்சன், திரில்லர் கதையாக உருவான இப்படத்தை சண்முகம் முத்துச்சாமி... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயனுக்கு போட்டியா? பாலா பதில்!

நடிகர் பாலா நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. நகைச்சுவை நடிகரான இவர் சமூக வலைதளங்களில் மூலம் வறுமையிலுள்ளவர்களுக்கு தொடர்ந்து உதவ... மேலும் பார்க்க