செய்திகள் :

நடுத்தரக் குடும்பங்களுக்கான தேர்தல் வாக்குறுதி: இன்று மதியம் ஆம் ஆத்மி வெளியீடு!

post image

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சி நடுத்தர வர்க்கத்தினரை மையப்படுத்தித் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.

ஆம் ஆத்மி கட்சி நடுத்தர குடும்பங்களுக்கான அறிக்கையை வெளியிடும் என்றும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று மதியம் அதை வெளியிடுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி முதல்வர் அதிஷியும், கேஜரிவாலும் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாஜக தலைவர் ரமேஷ் பிதுரி மற்றும் அவரது கூட்டாளிகள் ஆம் ஆத்மி கட்சியினருக்கு எதிராக போக்கிரித்தனம் செய்வதாக குற்றம் சாட்டினர்.

கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக "பயங்கரவாத" சூழலை உருவாக்கியதாகவும்,

இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

பிதுரியின் மருமகன்கள் என்று கூறிக்கொள்பவர்கள் ஆம் ஆத்மி கட்சியினரை மிரட்டி

அவர்களின் காலரைப் பிடித்துக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் உள்ளிட்ட பிரசாரப் பொருள்களை எரித்தனர் என்று அவர் கூறினார்.

கல்காஜியில் இருந்து ராகேஷ் பிதுரி தேர்தலில் போட்டியிட்டதிலிருந்தே, கல்காஜி விதான் சபா பகுதியில் பாஜக ஒரு பயங்கரமான சூழலை உருவாக்கியுள்ளது.

கேஜரிவாலும் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு, அதிஷி விவரித்த நிகழ்வுகள் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு மட்டும் அல்ல. பா.ஜ.க.வினர் போக்கிரித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"எந்தக் கட்சியும் அமைதியான முறையில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்று பார்க்கும் போதுதான் வன்முறையில் ஈடுபடுகின்றனர். தில்லியில் பாஜக வரலாற்றுத் தோல்வியை நோக்கிச் செல்கிறது. ஒரு கட்சி மிக மோசமாகத் தோற்கும் என்பது வரலாற்றில் எழுதப்படும் என்று கேஜரிவால் கூறினார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் நடுத்தரக் குடும்பங்களுக்கான தேர்தல் வாக்குறுதியை ஆத் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெளியிட உள்ளார்.

கொல்கத்தா வழக்கு: சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி சிபிஐ மனு?

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக அதிகரிக்கக்கோரி சிபிஐ தரப்பிலும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளது.கொல்கத்தா ஆர்.ஜி. கர் ம... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ரயில் மோதியதில் 6 பயணிகள் பலி?

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில், ரயிலில் தீப்பற்றியதாகப் புரளி பரவியதால் அச்சத்தில் ரயிலிலிருந்து இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியதில் 6 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜல்கான... மேலும் பார்க்க

தை அமாவாசை: மகா கும்பமேளாவுக்கு 150 சிறப்பு ரயில்கள்!

தை அமாவாசையை முன்னிட்டு மகா கும்பமேளாவுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என பிரயாக்ராஜ் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்... மேலும் பார்க்க

கோயில் அருகே போதைப்பொருள் விற்பனை: தடை கோரிய மனு நிராகரிப்பு!

புது தில்லி: கோயில்களுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பொது நல மனுதாரரான அ... மேலும் பார்க்க

ரூ.1 கோடி வெகுமதி: 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நக்சல் தலைவரைக் காட்டிக்கொடுத்த செல்ஃபி!

ஏறக்குறைய முப்பது ஆண்டு காலமாக தலைமறைவாக வாழ்ந்து வந்த நக்சல் மத்தியக் குழு உறுப்பினர், தனது மனைவியுடன் எடுத்த செல்ஃபி எப்படி அவருக்கு ஆபத்தாக முடிந்தது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒடிசா - ச... மேலும் பார்க்க

அதானி வீட்டு திருமணம்: ரூ. 5,000 கோடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

ஜீத் அதானியின் திருமணம் பெரும் பொருள் செலவில் நடைபெறவிருப்பதாகப் பரவிய வதந்திகளுக்கு கௌதம் அதானி மறுப்பு தெரிவித்துள்ளார்.தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்தாண்டு ஜூலை... மேலும் பார்க்க