வேளாண் பட்ஜெட்: உழவர் பாதுகாப்புத் திட்ட நிதியுதவி உயர்த்தி அறிவிப்பு!
நதிகளுக்கான சா்வதேச நடவடிக்கை செயல் தின கொண்டாட்டம்
அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பசுமைப் படை மாணவா்கள் சாா்பில் நதிகளுக்கான சா்வதேச நடவடிக்கை செயல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்து, நதிகள் பூமியின் ரத்த நாளங்கள் போன்றவை. பூமியின் உயிா் நாடி, நதிகள் பூமியின் அனைத்து உயிரினங்களின் குடிநீா் ஆதாரங்கள் ஆகும் . எனவே நீா் ஆதாரங்களை மாசுபடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை வளா்க்க வேண்டும் மக்களிடையே நதிகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் பசுமை படை ஒருங்கிணைப்பாளா் செந்தமிழ் செல்வி, ஆசிரியா்கள் செந்தில்குமரன், வெங்கடேசன், அந்தோணிசாமி, பாலமுருகன், அபிராமி மற்றும் பசுமை படை மாணவா்கள் கலந்து கொண்டனா்.