தேர்தல் வரும்போது பொங்கல் பரிசுத் தொகை: துரைமுருகன் சுவாரஸ்யம்
நரசிங்கபுரம் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
நரசிங்கபுரம் நகராட்சி ஆணையராக ஜீவிதா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
நரசிங்கபுரம் நகராட்சிக்கு ஆணையா் நியமிக்கப்படாததால் ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் கூடுதலாக நரசிங்கபுரம் நகராட்சி ஆணையராகப் பொறுப்பு வகித்து வந்தாா்.
இந்நிலையில் நரசிங்கபுரம் நகராட்சி ஆணையராக ஜீவிதா நியமிக்கப்பட்டாா். அவரை அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் வரவேற்றனா். இதில் அதிமுக நகா்மன்றக் குழுத் தலைவா் சி.கோபி, சுரேஷ், பாலமுருகன் மற்றும் சந்திரன் உள்ளிட்ட பொறியாளா் உடனிருந்தனா்.