செய்திகள் :

நரிக்குடி: சத்துணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு வாந்தி; வயிற்று வலி... சமையலர் பணியிடை நீக்கம்!

post image

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், புல்வாய்க்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியின் சத்துணவு மையத்தில் நேற்று மதியம் முட்டையுடன் சத்துணவு சமைத்து வழங்கப்பட்டது. இந்தநிலையில், பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களில் 14 பேருக்கு திடீர் வாந்தியும், கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் நரிக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நரிக்குடி

இந்த விவகாரம் பரபரப்பான நிலையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். இந்தநிலையில், சத்துணவு மையத்தினை சுகாதாரமாக வைக்காதது, தரமற்ற மதிய உணவு தயார் செய்யப்பட்டது ஆகியவற்றின் அடிப்படையில் புல்வாய்க்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையல் உதவியாளர் கருப்பாயி என்பவரை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், அறிவுரையின்படி தற்காலிக பணிநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருக்குறள் மாணவர் மாநாடு: "மாணவர்கள் படைப்பாளிகளாக வரவேண்டும்; ஏனென்றால்.." - முத்துக்குமரன் பேச்சு

விருதுநகர் மாவட்டத்தில் மாநில அளவிலான இரண்டாவது திருக்குறள் மாணவர் மாநாடு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.‌மாநாடு நிகழ்ச்சியைத் தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.... மேலும் பார்க்க

தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் தமிழக மாணவிகள் சாதனை; அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகமும், கல்வி அமைச்சகமும் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள 3 முதல் முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக 'வீர கதா 4.0' என்ற திட்டத்தின் கீழ் கவிதை, கட்டுரை எழுதுதல்... மேலும் பார்க்க

``நாங்களும் விமானத்தில் பறக்க வேண்டும்'' -அரசுப்பள்ளி மாணவர்கள் ஆசையை நிறைவேற்றிய ஆசிரியர்கள்..!

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொண்டனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் மைக்கேல் ராஜ். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் தலைமை ஆ... மேலும் பார்க்க