சாம் கான்ஸ்டாஸால் தொடக்க ஆட்டக்காரராக நீடிக்க முடியாது; ரிக்கி பாண்டிங் கூறுவதென...
நல்லமநாயக்கன்பட்டி பகுதியில் நாளை மின் தடை
நல்லமநாயக்கன்பட்டி பகுதியில் வியாழக்கிழமை (ஜன. 9) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், அண்ணா நகா், முதுகுடி, ஜமீன்கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.