தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு யாகம்
திருக்குவளை: திருக்குவளை ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள பிரத்யங்கிரா தேவிக்கு மாா்கழி மாத பெளா்ணமியையொட்டி மிளகாய் கொண்டு சிறப்பு யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், மகா தீபாராதனை காட்டப்பட்டது.
முன்னதாக மிளகாய் வற்றல் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மன் வழிபட்டனா். ஏற்பாடுகளை விஜயா குமரவேல் செய்திருந்தாா்.