செய்திகள் :

நள்ளிரவில் பயங்கரம்... மதுரையில் ரெளடி வெட்டிக் கொலை!

post image

மதுரை தனக்கன்குளத்தில் ரெளடி காளீஸ்வரன் என்பவர் நள்ளிரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தைச் சேர்ந்த ரெளடியான காளீஸ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நேற்றிரவு வீட்டின் வெளியே வந்த காளீஸ்வரனை 3 பைக்களில் மர்ம நபர்கள் அரிவாளால் காளீஸ்வரனை வெட்ட முயன்றனர். இதையடுத்து, அவர் ஓட முயற்சி செய்துள்ளார். இவரைப் பின்தொடா்ந்து விரட்டிச் சென்ற மர்மநபர்கள், காளீஸ்வரனை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இதையும் படிக்க: சிக்ஸர்களை குறிவைக்கும் தோனி: சிஎஸ்கே கேப்டன்

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காளீஸ்வரன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காளீஸ்வரன் ஆதரவாளர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இவ்வழக்கு தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவர் அடித்துக் கொலை!

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்... மேலும் பார்க்க

ஈரானிய கொள்ளைக் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி! கொள்ளையடிக்கும் பாணி!

சென்னையில் அடுத்தடுத்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பற்றிய தகவல் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது.இவர்கள் ஈரானிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்தியா முழுவதும் இதுபோன்று ஒர... மேலும் பார்க்க

பாம்பன் பாலம் திறப்பு: ஏப். 6 தமிழகம் வருகிறார் மோடி!

ராமேசுவரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளார். மேலும் பார்க்க

மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

நடிகரும் இயக்குநருமான மனோஜ் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார்.இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு ஏற்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்... மேலும் பார்க்க

நகைப் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டர்; காட்டிக்கொடுத்த ஷு: காவல் ஆணையர் அருண் விளக்கம்

சென்னை: சென்னைக்கு விமானத்தில் வந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டு விமானம் மூலம் தப்பிச் செல்லவிருந்த வடமாநிலக் கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை காவல் ஆணையர் அருண்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை வழக்கு: சிபிஐ-க்கு மாற்ற முறையீடு!

திருநெல்வேலியில் நிலப் பிரச்னை காரணமாக ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஜாகீா் உசேன் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது குடும்பத்தினர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் புதன்கிழமை முறைய... மேலும் பார்க்க