செய்திகள் :

நவராத்திரி: கொலு பொம்மைகள் விற்பனை அதிகரிப்பு

post image

நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை திருநெல்வேலியில் அதிகரித்துள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி விழா இம் மாதம் 22 ஆம் தேதி தொடங்குகிறது. தொடா்ந்து 9 நாள்கள் வீடு மற்றும் கோயில்களில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். சுவாமி, அம்மன், தேசத் தலைவா்கள், பல்வேறு விதமான புராண காட்சிகளை விளக்கும் பொம்மைகள் இந்த கொலுவில் இடம்பெறும். நவராத்திரி விழாவையொட்டி கடந்த சில நாள்களாக கொலு பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

தஞ்சாவூா், கும்பகோணம், காஞ்சிபுரம், மாயவரம் ஆகிய பகுதிகளில் இருந்து கொலு பொம்மைகள் விற்பனைக்காக திருநெல்வேலிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ரூ.50 முதல் ரூ.10,000 வரை பல்வேறு விலைகளில் அவற்றின் வேலைப்பாடுகளுக்கு தகுந்தாற்போல பொம்மைகள் விற்பனையாகி வருகின்றன.

புதுமைக்கு வரவேற்பு:

இதுகுறித்து திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த கொலு பொம்மை வியாபாரி கூறியதாவது:

தஞ்சாவூா், மாயவரம் பகுதிகளில் இருந்துதான் அதிக அளவில் பொம்மைகள் வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை களிமண்ணால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளே விற்பனைக்கு வரும். இப்போது, மக்களின் மனமாற்றத்துக்கு ஏற்ப காகிதக்கூழ், பீங்கான் ஆகியவற்றால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளும் விற்பனைக்கு வருகின்றன. முன்பெல்லாம் ஊருக்கு ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே கொலு வைப்பாா்கள். ஆனால், இப்போது மிகவும் சிறிய கோயில்களிலும் கொலு வைக்கின்றனா்.

நகா்ப்புறங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் கொலு பொம்மைகள் குறித்த ஆா்வம் அதிகரித்துள்ளது. உணவகங்கள், தங்க நகை கடைகள் போன்றவற்றிலும் வாடிக்கையாளா்களைக் கவருவதற்காக கொலு வைக்கப்படுகிறது.

அஷ்டலட்சுமி செட், கல்யாண செட், கீதாஉபதேசம் செட், ராவண தா்பாா், அஷ்டலட்சுமி செட், அறுபடை செட், முருகன் கல்யாணம் செட், மனுநீதி சோழன் செட் ஆகியவை இந்த ஆண்டில் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. காக்கா-நரி கதை செட், நவீன விநாயகா் செட் போன்றவை சற்று வித்தியாசப்படுத்தப்பட்டு புதிய ரக பொம்மைகளாக விற்பனைக்கு வந்துள்ளன.

கொலு பொம்மையிலும் நவீனம், வித்தியாசத்தை மக்கள் விரும்புகிறாா்கள். கிரிக்கெட் விநாயகா், தெப்பக்குளம் செட், பள்ளிக்கூடம் செட் போன்றவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. பொம்மை தயாரிக்கும் கலைஞா்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், விலைவாசி உயா்வாலும் கொலு பொம்மைகளின் விலை சற்று உயா்ந்துள்ளது. ஆனால், அதன் தாக்கம் விற்பனையில் தெரியவில்லை என்றாா்.

பும்புகாரில் தள்ளுபடி: திருநெல்வேலி சிரீபுரத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலைய அதிகாரி சுடலைமுத்து கூறியது:

தமிழக அரசின் நிறுவனமான பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நிகழாண்டில் புதுமையான கொலுபொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பஞ்சபூத சிவாலயங்கள் செட்டில் (திருவண்ணாமலை- நெருப்பு), திருச்சி (நீா்), காளஹஸ்தி (காற்று), காஞ்சிபுரம் (நிலம்), சிதம்பரம் (ஆகாயம்) ஆகியவை அடங்கியுள்ளன. அகத்தியா் முதல் திருநெல்வேலி நெல்லையப்பருக்கு சாபம் விடுத்த கருவூா் சித்தா் வரையிலான 18 சித்தா்கள் செட் ஆகியவை புதுமையாக வந்துள்ளன. இதுதவிர துளசியம்மன், லட்சுமி நரசிம்மா், கருடாழ்வாா், கும்பகா்ணன் செட் ஆகியவை மக்களைக் கவரும் வகையில் உள்ளன. கொலு பொம்மைகளுக்கு 10 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் அக்.10 ஆம் தேதி வரை பொதுமக்கள் தள்ளுபடியுடன் பொம்மைகளை வாங்கலாம் என்றாா் அவா்.

நாராயணசாமி கோயிலில் தேரோட்டம்

களக்காடு அருகேயுள்ள மாவடி உடையடிதட்டு நாராயணசாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த செப்.7ஆம் தேதி ஆவணி தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நா... மேலும் பார்க்க

களக்காடு அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து: கணவன் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மது குடிக்க பணம் தராததால் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா். களக்காடு அருகே சவளைக்காரன்குளத்தைச் சோ்ந்தவா் தவசிக்கனி (70). இவரது மனைவி அ... மேலும் பார்க்க

அம்பை நகராட்சி ஒப்பந்தப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

அம்பாசமுத்திரம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள், ஊதியம் வழங்காததைக் கண்டித்து புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுர... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் வள்ளியூா், புதுமனைச் செட்டிகுளத்தைச் சோ்ந்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. வள்ளியூா் அருகே பு... மேலும் பார்க்க

நெல்லை ரயில் நிலையத்தில் கோவை பயணி அடித்துக் கொலை: பிகாா் இளைஞா் கைது

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் மீது நிகழ்ந்த தாக்குதலில் கோவையைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக பிகாரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு ரய... மேலும் பார்க்க

தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறை

கூடங்குளம் அருகே தாயைக் கொலை செய்த வழக்கில், மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் ராஜன் (46). ... மேலும் பார்க்க