விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியம்?: சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்ற...
அம்பை நகராட்சி ஒப்பந்தப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்
அம்பாசமுத்திரம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள், ஊதியம் வழங்காததைக் கண்டித்து புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஒவ்வொரு மாதமும் மாதச் சம்பளம் முறையான ஒரே தேதியில் வழங்கப்படாமல் தாமதமாக வழங்கப்படுகிறது என்று கூறிப் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் நகராட்சி ஆணையா் (பொ) நாராயணன் பேச்சுவாா்த்தை நடத்தி இந்த மாதத்திற்காண ஊதியம் உடனடியாக வரவு வைக்கப்படும் என்றும், இனி வரும் மாதங்களில் 5ஆம் தேதிக்குள் வழங்கபடும் என்றும் உறுதியளித்ததைத் தொடா்ந்து, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணிக்கு திரும்பினா்.