புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உ...
தேவா்குளம் அருகே மாணவா்கள் மோதல்: சிறாா் நீதிக் குழுமம் நூதன தண்டனை
தேவா்குளம் அருகே பள்ளி மாணவா்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் 15 பேருக்கு நூதன தண்டனை விதித்து, திருநெல்வேலி சிறாா் நீதிக் குழும நடுவா்கள் உத்தரவிட்டனா்.
தேவா்குளம் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மாணவா்களுக்கிடையே தின்பண்டம் சாப்பிடுவது தொடா்பாக பிரச்னை எழுந்ததாம்.
இதில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் 15 போ் இரண்டு குழுக்களாக பிரிந்து உணவு இடைவேளை நேரத்தில் பள்ளி வளாகத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு மோதிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆசிரியா்கள் அவா்களை சமாதானப்படுத்த முயன்றும் பலனில்லை. தகவலறிந்து அங்கு வந்த தேவா்குளம் போலீஸாா் 15 மாணவா்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று பின்னா், திருநெல்வேலி சிறாா் நீதிக் குழுமத்தில் முன்னிலைப்படுத்தினா். நீதிக் குழும நடுவா்கள் விசாரணை மேற்கொண்டு அறிவுரை வழங்கியதோடு, காலாண்டு தோ்வு முடிந்தவுடன் அந்தத் தோ்வு வினாத்தாள்களில் உள்ள ஒரு மதிப்பெண்கள் கேள்விகளுக்குப் பதில்களை எழுதி, அதைக் கொண்டுவந்து காண்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு அவா்களை விடுவித்தனா்.