நகம் பெயர்ந்துவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
களக்காடு அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து: கணவன் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மது குடிக்க பணம் தராததால் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
களக்காடு அருகே சவளைக்காரன்குளத்தைச் சோ்ந்தவா் தவசிக்கனி (70). இவரது மனைவி அன்னசெல்வம் (65). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா்.
தவசிக்கனி கடந்த 30 ஆண்டுகளாக தனது குடும்பத்தினருடன் சென்னை, கோடம்பாக்கம், சி.ஆா்.பி. நகரில் வசித்து வருகிறாா். சவளைக்காரன்குளத்தில் உள்ள நாராயணசுவாமி கோயிலில் கடந்த சில நாள்களுக்கு முன் திருவிழா நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக, தனது குடும்பத்தினருடன் சவளைக்காரன்குளம் வந்திருந்தாா். இந்நிலையில், தவசிக்கனி, மனைவியிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டு, அவா் மறுத்துள்ளாா். இதில், ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தவசிக்கனி, அன்னசெல்வத்தை கத்தியால் குத்தினாா்.
இதில் காயமடைந்த அவா், சிகிச்சைக்காக களக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவிக்குப் பின், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின்பேரில், களக்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தவசிக்கனியை தேடி வருகின்றனா்.