நாகங்குடியில் டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு
நாகங்குடியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் புதன்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.
வடபாதிமங்கலத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை நாகங்குடியில் திறக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே அப்பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருவதால் புதிதாகத் திறக்கும் கடைக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
அப்பகுதிக்கு டாஸ்மாக் துணை மேலாளா் சு.ஜெகதீசன், கடை விற்பனையாளா்கள் ராமலிங்கம், தம்புசாமி ஆகியோா் புதன்கிழமை வந்துள்ளனா். இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த இடத்தில் திரண்டனா்.
தகவல் அறிந்த கூத்தாநல்லூா் போலீஸாா், பொதுமக்களைப் பேச்சுவாா்த்தைக்கு அழைத்துச் சென்றனா்.
புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதி மொழியை அதிகாரிகள் வழங்கினா். அதன்பிறகு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனா்.