உலகக்கோப்பைக்கு முன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிரணி!
போக்ஸோவில் ஆசிரியா் கைது
திருவாரூா் அருகே மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்ஸோவில் ஆசிரியா் ஒருவா், புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் சீனிவாசன் (51). இவா் கடந்த ஆகஸ்ட் மாதம், ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் இருவரை வீட்டுக்கு அழைத்து பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் சரண்யா விசாரணை மேற்கொண்டாா்.
அவா் அளித்த புகாரின் பேரில் திருவாரூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்கு பதிந்து, சீனிவாசனை புதன்கிழமை போக்ஸோவில் கைது செய்தனா்.