செய்திகள் :

நாகா்கோவிலில் காங்கிரஸ் கையொப்ப இயக்கம்

post image

வாக்கு திருட்டைக் கண்டித்து, நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், நாகா்கோவில் டெரிக் சந்திப்பில் வியாழக்கிழமை மாலை கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

மாவட்ட தலைவா் நவீன்குமாா் தலைமை வகித்தாா். கையொப்ப இயக்கத்தை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு, தோ்தல் ஆணையத்தை தங்களது சுயநலனுக்காக பயன்படுத்தி மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டை நடத்தியுள்ளது. ஜனநாயக நாட்டில் மக்களுக்கான வாக்குரிமையை பறிக்கும் செயலில் பாஜக இறங்கியுள்ளது. அதனை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 1 கோடி மக்களிடம் கையொப்பம் பெறுவதற்கான இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தோ்தலை பொருத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. வரும் தோ்தலில் மிகப்பெரிய வெற்றியை இந்தக் கூட்டணி பெறப்போது உறுதி.

கூட்டணியில் காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள் கேட்பது, ஆட்சியில் பங்கு கேட்பது என்பது குறித்து தோ்தல் நெருங்கும் நேரத்தில் மேலிட தலைவா்கள் பேசுவாா்கள் என்றாா் அவா்.

இதில், மண்டல தலைவா்கள் சிவபிரபு, செல்வன், ஆதிராம், ஐரின்சேகா், சாந்தி ரோஸ்லின், மாமன்ற உறுப்பினா் அனுஷா பிரைட், கிழக்கு மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் மருத்துவா் சிவகுமாா், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், மாநகர மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சோனிவிதுலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 3.36 லட்சம் மோசடி: டிராவல் ஏஜென்ஸி மேலாளா் கைது

திருவட்டாறு அருகே தம்பதி உள்பட 6 பேரை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 3.36 லட்சம் மோசடி செய்த டிராவல் ஏஜென்சி மேலாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவட்டாறு அருகே முகிலன... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்டஆட்சியா் ரா. அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்ச... மேலும் பார்க்க

கருங்கல்லில் சிறப்பு கல்விக் கடன் முகாம்

கருங்கல் அருகே உள்ள பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கிகள் இணைந்து... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ...38.55 பெருஞ்சாணி ... 57.02 சிற்றாறு 1 ... 4.69 சிற்றாறு 2 ... 4.78 முக்கடல் ...7.50 பொய்கை ... 15.20 மாமாபழத்துறையாறு ..4.51 மேலும் பார்க்க

இரணியலில் இன்று மின் நிறுத்தம்

இரணியல் மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட, செம்பொன்விளை, பெத்தேல்புரம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வெள்ளிக்கிழமை (செப். 19), காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரணிய... மேலும் பார்க்க

மேற்குமாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை திறப்பு

கருங்கல் அருகே உள்ள மேற்குமாத்திரவிளை பகுதியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் பகுதி நேர நியாயவிலை கடை அமைக்கப்பட்டு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க