குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
மேற்குமாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை திறப்பு
கருங்கல் அருகே உள்ள மேற்குமாத்திரவிளை பகுதியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் பகுதி நேர நியாயவிலை கடை அமைக்கப்பட்டு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கிள்ளியூா் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்து புதிய பகுதிநேர ரேஷன் கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு பொருள்கள் வழங்கினாா். கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலா் கணேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ராஜசேகரன், மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் மரிய அருள்தாஸ், ஆசீா் பிறைட் சிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.