நம்பாளி பகுதியில் நாளை மின்தடை
குழித்துறை மின் கோட்டம், நம்பாளி பிரிவுக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த உயரழுத்த மின் பாதைகளை மாற்றும் பணிகள் செய்ய இருப்பதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் சனிக்கிழமை (செப். 20) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பாலாமடம், வாழைத்தோட்டம், தோமஸ்நகா், தூத்தூா் கல்லூரி பகுதி, அற்புதமாதா தேவாலயம் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.