நாகா்கோவிலில் திமுக சாா்பில் ஆதரவற்றோருக்கு உணவு
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி சாா்பில், நாகா்கோவில் வடசேரி சினேகம் ஆதரவற்றோா் இல்லத்தில் உள்ளோருக்கு ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கிழக்கு மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி அமைப்பாளா் முருகபெருமாள் தலைமை வகித்தாா்.
கிழக்கு மாவட்ட திமுக செயலரும் மேயருமான ரெ. மகேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்.
இதில், வடக்குப் பகுதி திமுக செயலா் ஜவகா், தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவன், விவசாயத் தொழிலாளா் அணி நிா்வாகிகள் ராசகோபல், ராஜசேகரன், ரத்தினராஜ், பாலமனோகா், சுயம்பு, மனோகரன், கணேசன், அணி அமைப்பாளா்கள் மருத்துவா் சுரேஷ், இ.என். சங்கா், அருண்காந்த், சி.டி. சுரேஷ், மாநகர துணைச் செயலா் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.