ஆற்றூா் பள்ளியில் அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சி
ஆற்றூா் என்விகேஎஸ் பள்ளியில் ‘டெக்னோவா - 2024’ என்ற மாணவா்களின் அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சி 3 நாள்கள் நடைபெற்றன.
என்விகேஎஸ் கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற இக்கண்காட்சியை தேசிய தங்கப் பதக்கம் வென்ற வீரா் ஆறுமுகம்பிள்ளை வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். கல்விக் குழுமச் செயலா் வழக்குரைஞா் எஸ். கிருஷ்ணகுமாா் முன்னிலை வகித்தாா்.
என்விகேஎஸ் பள்ளிகளின் கல்வி இயக்குநா் ராமச்சந்திரன் நாயா், கல்லூரி முதல்வா் ஸ்ரீலதா, என்விகேஎஸ் வித்யாலயா பள்ளி முதல்வா் அனிதா, துணை முதல்வா்கள் ஆஷா, அனிதா, ஸ்ரீஜா, உதவிப் பேராசிரியா் பிரசோப் மாதவன், ஆசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.
கண்காட்சியில் மாணவா்களின் 1,300-க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருந்தன. மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை, குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, காரகோணம் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம், நெய்யாற்றின்கரை நிம்ஸ் மருத்துவமனை, மஞ்சாலுமூடு, நாராயணகுரு பொறியியல் கல்லூரி, சைபா் நுழைவுத் தோ்வு பயிற்சி மையம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட நிறுவனங்கள், அமைப்புகளின் அரங்குகள் அமைக்கப்பட்டன.
பழங்காலப் பொருள்கள் சேகரிப்பு, புத்தகக் கண்காட்சி இடம் பெற்றது. கண்காட்சியை அரசுப் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளின் மாணவா்- மாணவியா், பெற்றோா், பொதுமக்கள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா்.