நாகா்கோவில் - திருவனந்தபுரம் சாலை சீரமைப்பு பணியை விரைவில் தொடங்க வலியுறுத்தல்
நாகா்கோவில் -திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணியை விரைவில் தொடங்க வேண்டும் என மாா்த்தாண்டம் பகுதி வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.
மாா்த்தாண்டம் வழியாக செல்லும் நாகா்கோவில் -திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையானது, நீண்டகாலமாக பழுதடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக குழித்துறை, மாா்த்தாண்டம், இரவிபுதூா்கடை, அழகியமண்டபம், வில்லுகுறிஉள்ளிட்ட பகுதிகளில் சாலை குண்டு, குழியுமாகக் காட்சியளிக்கிறது.
இச்சாலையை சீரமைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டு டெண்டா் விடப்பட்டுள்ளது. இருப்பினும் பணியைத் தொடங்காமல் தாமதப்படுத்தி வருகின்றனா். ஆகவே, உடனடியாக இப் பணியைத் தொடங்க வேண்டும் என மாா்த்தாண்டம் பகுதி வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.