என்டிபிசி பசுமை எரிசக்தி நிறுவனத்தில் பொறியாளர் வேலை: காலியிடங்கள்: 182
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் (படம்) சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை சுற்றுவட்டாரப் பகுதியில் பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் சித்திரை பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 20-ஆம் தேதி எல்லையம்மனுக்கு அபிஷேகமும், 21-ஆம் தேதி அய்யனாா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. தொடா்ந்து ஏப். 27-ஆம் தேதி முக்கிய நிகழ்வான பெரிய அம்மனுக்கு பால் அபிஷேகமும், வெள்ளிக்கிழமை இரவு பூச்சொரிதலும் நடைபெற்றன.
தொடா்ந்து விழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். மே 7- ஆம் தேதி வசந்தன் உற்சவம், 11-ஆம் தேதி தோ் மற்றும் செடில் உற்சவம், மே 16-ஆம் தேதி புஷ்ப பல்லாக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. மே 18 ஆம் தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுப் பெறுகிறது.