செய்திகள் :

நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்

post image

நாக்பூரில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரம் முன்பே திட்டமிடப்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்கசீப்பில் கல்லறையை அகற்ற வேண்டும் என்று வலதுசாரி அமைப்பினர் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதன்தொடர்ச்சியாக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், மத்திய நாக்பூர் பகுதியில் போராட்டம் நடத்துபவர்கள் இஸ்லாமியர்களின் புனித நூலை எரிப்பதாக தகவல் பரவிய நிலையில் இரு தரப்பினருக்கு இடையே கலவரமானது.

வன்முறை சம்பவத்தில் 15 போலீசார் உள்பட 20 பேர் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர நாக்பூரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், ”இந்தக் கலவரம் ஏற்பட காரணமாக இருந்த கும்பல் கற்கள், ஆயுதங்களுடன் முன்பே தயாராக இருந்தனர். அவர்கள் குறிப்பிட்ட சமூகத்தினரின் கடைகள், குடியிருப்புகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர். இது திட்டமிட்டத் தாக்குதலைப் போலத் தெரிகிறது.

துணை கமிஷனர் கோடாரியால் தாக்கப்பட்டார். 33 காவல்துறை அதிகாரிகள் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தனர். தாக்குதலில் மக்கள் பலரும் காயமடைந்த நிலையில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள்

11 காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாக்பூர் நகருக்குள் நுழையும் பல வழிகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் காரணமானவர்களுக்கு, அவர்களின் மதம் சார்ந்த பாரபட்சமன்றி தண்டனை வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “சமீபத்தில் வெளியான சாவா திரைப்படம் சம்பாஜி மகாராஜா குறித்து மக்களுக்கு உண்மையான வரலாற்றைக் கூறினாலும் ஔரங்கசீப்ப்புக்கு எதிரான மக்களின் உணர்வுகளைத் தூண்டியுள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மாநிலத்தின் முதலீடுகளைப் பாதிக்கின்றது. மக்கள் அனைவரும் ஒருவர் மற்றொருவரின் மதத்தை மதித்து சகோதரத்துவத்தைப் பேணவேண்டும்” என அவர் தெரிவித்தார்.

மணிப்பூா் முகாம்களுக்கு மாா்ச் 22 செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 போ் சனிக்கிழமை (மாா்ச் 22) செல்ல உள்ளனா். இதுதொடா்பாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு (என்ஏஎல்எஸ்ஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்: இந்தியா

சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீா் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த லெக்ஸ் ஃபிரிட்மென்னுக்கு பிரதமா் மோடி அண்மையில் அளித்த நோ்காணல... மேலும் பார்க்க

நாகபுரி வன்முறை: 50 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள முகாலய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி அந்த நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. நாகபுர... மேலும் பார்க்க

குடிமைப் பணிகள் தோ்வு முறைகேடு: பூஜா கேத்கருக்கு எதிராக ஏப்.15 வரை கைது நடவடிக்கை கூடாது -உச்சநீதிமன்றம்

குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ஏப்.15 வரை உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி வாரியான வாக்குப்பதிவு விவரம் பதிவேற்றம் குறித்து ஆலோசிக்கத் தயாா்: தோ்தல் ஆணையம்

மக்களவை, மாநில சட்டப்பேரவை தோ்தல்கள் வாக்குப் பதிவின்போது, வாக்குச்சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடா்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க ... மேலும் பார்க்க

ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது. ரயில்களின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் செலுத்தி வரும் கவனம் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது என்று ம... மேலும் பார்க்க