தஞ்சை பெருநந்திக்கு 2 ஆயிரம் கிலோ காய்கறி, பழங்களால் அலங்காரம்!
நாக சைதன்யாவின் தண்டேல் திரைப்பட டீசர் வெளியானது!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா நடிப்பில் உருவாகிவரும் தண்டேல் திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. எசன்ஸ் ஆஃப் தண்டேல் என்ற பெயரில் இந்த டீசர் வெளியாகியுள்ளது.
நாக சைதன்யா, சாய் பல்லவி, சந்தீப் வெத் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் சந்து மொந்தேத்தி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை சாய் பல்லவி இந்தப் படத்தில் நாக சைதன்யாவுடன் நடிக்கிறார். இது நாக சைதன்யாவின் 23 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் கடைசியாக வெளியான விராட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தமிழில் வெளியான அமரன் படத்திலும் சாய் பல்லவி சாய் பல்லவியின் நடிப்பில் பெரிய அளவிலான பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் பிப்.7ஆம் தேதியன்று வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.