செய்திகள் :

'நாங்கள் தலைமறைவாக இருந்தோமா? உண்மை என்ன தெரியுமா?’ - விளக்கும் சி.டி.ஆர்.நிர்மல் குமார்

post image

தவெக கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக்குழு ஒன்றை விஜய் அறிவித்திருந்தார். அந்த நிர்வாகக்குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கரூர் சம்பவம் குறித்தும் விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

சி.டி.ஆர்.நிர்மல் குமார்
சி.டி.ஆர்.நிர்மல் குமார்

கூட்டத்தை முடித்துவிட்டு வந்த அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், ``அடுத்தக்கட்ட கட்சிப் பணிகள் குறித்தும் தேர்தல் குறித்தும் பேசினோம். இது கட்சியுடைய core கமிட்டி.

அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்கு Common SOP வேண்டுமென உயர் நீதிமன்றத்தை அனுகியிருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் வரைமுறைகளை வகுக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அந்த வரைமுறைகள் வந்த பிறகு பிரசாரத்தை தொடர்வோம்.

எங்களுக்கு எவ்வளவு தடைகள் இருந்ததென எல்லாருக்கும் தெரியும். கரூரில் சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3 மணி வரை நாங்கள் கரூருக்கு வெளியே காத்திருந்தோம். கரூருக்குள் செல்ல எங்களுக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எல்லா இடத்திலும் எங்களின் நிர்வாகிகளை தாக்கினார்கள்.

மக்கள் எங்கள் கட்சியின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியும். 41 பேர் உயிரிழந்ததுதான் எங்களுக்கு மீள முடியாத சோகம். கரூரில் எவ்வளவு போலீஸ் இருந்தார்கள் என எல்லாருக்கும் தெரியும்.

சி.டி.ஆர்.நிர்மல் குமார்
சி.டி.ஆர்.நிர்மல் குமார்

எந்த எந்த இடங்களில் எவ்வளவு போலீஸ் பணியமர்த்தப்பட்டிருந்தனர் என்பதை அவர்களால் கொடுக்க முடியுமா? 2500 டூவிலர்கள் தலைவரின் வாகனத்தை சுற்றி வந்தன. 1மணி நேரத்தில் கடக்க வேண்டிய இடத்தை நாங்கள் கடக்க 7 மணி நேரம் ஆனது. உள்ளரங்கில் நடக்கும் கூட்டத்துக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வோம். பொது இடத்தில் நடக்கும் கூட்டத்துக்கு காவல்துறைதானே எல்லா பாதுகாப்புகளையும் செய்து கொடுக்க வேண்டும்? அதற்காகத்தானே நாங்கள் முறையாக அனுமதி கேட்டிருந்தோம்? கரூரில் காவல்துறையினர் எதற்காக தடியடி நடத்தினர்? அமைதியான கூட்டத்தில் எதற்கு தடியடி? இதுசம்பந்தமாக மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டிருக்கிறோம்.

நாங்கள் யாரும் தலைமறைவாக இல்லை. எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. அவ்வளவுதான்.

எங்கள் கட்சியை முடக்க முடியாது. இதை விட பெரிய தடைகளையெல்லாம் நாங்கள் தைரியமாக எதிர்கொள்வோம். SIR சம்பந்தமான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு செல்வோமா இல்லையா என்பதை அடுத்து அறிவிப்போம். இந்த நிர்வாகக்குழு கூட்டத்தின் முடிவுகள் அத்தனையும் தலைவரிடம் கொடுக்கப்படும்.' என்றார்.

சி.டி.ஆர்.நிர்மல் குமார்
சி.டி.ஆர்.நிர்மல் குமார்

கரூர் சம்பவத்தில் அதிமுகவும் பாஜகவும் தவெகவுக்கு ஆதரவளித்தே? அவர்களுடன் கூட்டணி செல்வீர்களா? எனும் கேள்விக்கு,

'ஒரு மாதத்துக்கு முன்பிருந்த நிலைப்பாட்டில் அப்படியே இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.' என்றார்.

`இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ... மேலும் பார்க்க

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஶ்ரீதர் வாண்டையார்பார்வர்ட் பிளாக் கட்சி... மேலும் பார்க்க

வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்... கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக ... மேலும் பார்க்க

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?' - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்... மேலும் பார்க்க

புதுச்சேரியை உலுக்கிய மருந்து கொள்முதல் முறைகேடு - சிக்கிய அதிகாரிகள்; சிக்கலில் ஆட்சியாளர்கள்

புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கடந்த 2018-19 ஆண்டு கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்ட கர்ப்... மேலும் பார்க்க

குருபூஜை: "எடப்பாடிதான் எங்கள் எதிரி" - செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று முத்துராமலிங்கனர் சிலைக்கு மாலை அணிவிக்க அதிமுக தொண்... மேலும் பார்க்க