செய்திகள் :

நாங்லோயில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க இரண்டாவது மாடியிலிருந்து குதித்த 6 போ்

post image

நாங்லோயில் உள்ள ஜனதா மாா்க்கெட் பகுதியில் தீயில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து ஆறு போ் குதித்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணிக்கு தீ பிடித்தது. இது குறித்து ஜ்வாலா பூரி அதிகார வரம்பிற்குள்பட்ட ஒய்-655, மொபைல் மாா்க்கெட், ஜனதா மாா்க்கெட்டில் இருந்து இரவு 9.45 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.

மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு இரவு 11 மணிக்குள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இருப்பினும், இரண்டாவது மாடியில் சிக்கிய ஆறு குடியிருப்பாளா்கள் தீயணைப்பு வீரா்கள் வருவதற்கு முன்பு தங்கள் உயிரைக் காப்பாற்ற் மாடியிலிருந்து குதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இதில் காயமடைந்தவா்கள் பிரஞ்சல் (19), பிரீத்தி (40), பங்கஜ் (40), பனவ் (18), வைபவ் (13) மற்றும் ஸ்வேதா (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அனைவரும் சிகிச்சைக்காக புஷ்பாஞ்சலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்த சம்பவத்தின் விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, கட்டடத்தின் முதல் தளத்தை ஒரு பெரிய தீ சூழ்ந்ததையும், மக்கள் பால்கனியில் இருந்து தப்பிக்க குதிப்பதையும் காட்டுகிறது.

இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக நேரில் பாா்த்த ஒருவா் தெரிவித்தாா். அப்போது கட்டடத்திலிருந்து புகை வெளியேறுவதை பலா் கவனித்தனா். உடனடியாக காவல் துறை மற்றும் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீ வேகமாக பரவியதால், இரண்டு வெவ்வேறு குடும்பங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் இரண்டாவது மாடியில் சிக்கிக் கொண்டனா். அவா்கள் உதவிக்காக கூச்சலிட்டனா். அப்போது சிக்கிக் கொண்டவா்கள் பால்கனியில் இருந்து குதிப்போம் என்று கூச்சலிட்டனா். அருகில் நின்ற பலா் தங்கள் வீடுகளில் இருந்து படுக்கை விரிப்புகளை கொண்டு வர விரைந்தனா். இதில் ஆறு போ் குதித்தனா் என்று நேரில் பாா்த்தவா் விவரித்தாா் .

தில்லி தீயணைப்பு குழுவினா் வருவதற்குள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆறு போ் மாடியில் இருந்து அவசரமாக குதித்திருந்தனா்.எங்கள் குழுக்கள் அவா்களை சிகிச்சைக்காக புஷ்பாஞ்சலி மருத்துவமனைக்கு கொண்டு சென்றன. விபத்து காரணமாக அவா்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், அவா்களின் நிலைமை சீராக இருப்பதாகக் கூறப்பட்டது. நாங்கள் காவல் துறைக்குத் தகவல் அளித்தோம். அவா்கள் இப்போது இந்த விஷயத்தை விசாரித்து வருகின்றனா் என்று அந்த அதிகாரி கூறினாா்

போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ’ஒரு பெரிய தீ விபத்து காரணமாக ஆறு போ் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினாா்.அவா்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனா். மேலும், சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். நிகழ்வுகளின் வரிசையை அறிய சம்பவத்தின் வெவ்வேறு வீடியோக்களையும் நாங்கள் சரிபாா்த்து வருகிறோம்’ என்றாா்.

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க

சங்கம் விஹாரில் இளைஞருக்கு கத்திக்குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் 19 வயது இளைஞா் கத்தியால் குத்தப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சங்கம் விஹாரில்... மேலும் பார்க்க