நாசரேத்தில் 4 கடைகளுக்கு அபராதம்
நாசரேத்தில் 4 கடைகளுக்கு சுகாதார அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
பேருந்து நிலையம் அருகேயுள்ள கடைகள், உணவகங்களில் சுகாதார ஆய்வாளா்கள் தியாகராஜன், ஜெசுராஜ், ஞானராஜ், திருவடிவாசன், சுனில் தா்ஷன், மகேஷ்குமாா், அனிஸ், அஸ்வின்பா்ன் ஆகியோா் அடங்கிய குழுவினா் திடீா் சோதனை மேற்கொண்டு, வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினா்.
உணவுப் பாதுகாப்பு உரிமம் இல்லாத 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டது.