`நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டியவர்’ - குமரி அனந்தனுக்கு தலைவர்கள் இரங்கல்!
தமிழக அரசியல் மற்றும் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் (93), உடல் நல குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்றிரவு (ஏப்ரல் 8) உயிரிழந்தார்.
தனது தந்தையின் மறைவு குறித்து தமிழிசை சௌந்தராஜன், "தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை... தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று.... பெருமையாக பேசவைத்த என் தந்தை இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்...

மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா... நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ... அதை மனதில் கொண்டு... உங்கள் பெயரில்... நாங்கள் செய்வோம் என்று உறுதியோடு உங்களை வழி அனுப்புகிறோம்" என்று எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.
இன்று காலை சட்டமன்றத்தில், குமரி அனந்தனுக்கு இரங்கல் தீர்மானமும் வாசிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தலைவர்கள் பலரும் குமரி அனந்தனுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின்:
"காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். குமரி மாவட்டத்தில் பிறந்து, பெருந்தலைவர் காமராசரின் அடியொற்றி, காங்கிரஸ் பேரியக்கத்துக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட அவரது மறைவு தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu@mkstalin@mp_saminathanpic.twitter.com/aJuVcp5vZ9
— TN DIPR (@TNDIPRNEWS) April 9, 2025
நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டிய பெருமை இவரையே சாரும். அதனால்தான் கலைஞர் இதுகுறித்து குறிப்பிடும்போது, "தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழியை மாற்றி அமைத்துவிட்டார்" எனப் புகழாரம் சூட்டினார். தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்கு வாழ்ந்திட்ட அவரது பெருவாழ்வைப் போற்றி, அவருக்கு நமது அரசின் சார்பில் கடந்த ஆண்டு 'தகைசால் தமிழர்' விருது வழங்கி பெருமை கொண்டோம்."
எடப்பாடி பழனிசாமி:
"தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். பாசமிகு தந்தையாரை இழந்து சொல்லொண்ணா துயரில் வாடும் அன்புச் சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த குமரி அனந்தன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்."
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) April 9, 2025
மூத்த தலைவரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான திரு. குமரி அனந்தன் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
பாசமிகு தந்தையாரை இழந்து சொல்லொண்ணா துயரில் வாடும் அன்புச் சகோதரி திருமதி. @DrTamilisai4BJP அவர்களுக்கும், அவர்தம்… pic.twitter.com/tLQMUhSfBy
செல்வப்பெருந்தகை:
"தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 19 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக, மிகச் சிறப்பாக பணியாற்றியவர். நாடாளுமன்றத்தில் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்டு, இந்திய மொழிகள் அனைத்தும் ஆட்சியாளர்களின் அவையில் ஒலிக்க வேண்டும் என முத்திரை பதித்தவர். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு பொறுப்புகளை நிதானமாகவும், நம்பிக்கையுடனும் வரலாற்று சிறப்புமிக்க தலைவராக விளங்கிய திரு. குமரி ஆனந்தன் அவர்கள் காலமானார் என்பது செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும்… pic.twitter.com/jfLO2JDnIr
— Selvaperunthagai K (@SPK_TNCC) April 9, 2025
அவரது தூய்மை, நேர்மை மற்றும் தலைமைத் தன்மை இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 29 நூல்களை எழுதி உள்ளார். குமரி ஆனந்தன் மறைவு தமிழ் நாட்டுக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்."
திருமாவளவன்:
"இலக்கியச் செல்வர் குமரி_அனந்தன் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. தனது இறுதிமூச்சு வரையில் காந்தியடிகள் மற்றும் காமராசர் ஆகியோரின் கொள்கை வழியில் பயணித்தவர். மதுவிலக்கு கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டு அதில் உறுதிகுலையாமல் நின்றவர். அவருடைய இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் காந்தி- காமராசர் வழிவந்த தொண்டர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்."
இலக்கியச் செல்வர் #குமரி_அனந்தன் (93) அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. தனது இறுதிமூச்சு வரையில் காந்தியடிகள் மற்றும் காமராசர் ஆகியோரின் கொள்கை வழியில் பயணித்தவர். மதுவிலக்கு கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டு அதில் உறுதிகுலையாமல் நின்றவர். அண்மையில் விடுதலைச் சிறுத்தைகளின்… pic.twitter.com/w5L6z3ZMet
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 9, 2025
அண்ணாமலை:
"தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அப்பழுக்கின்றி பணியாற்றியவர். பல்வேறு தமிழ் இலக்கியங்கள் சார்ந்த நூல்களை எழுதியவர். பனைமரங்கள் பாதுகாப்புக்காவும், நதிகள் இணைப்புக்காகவும், பாரதமாதா கோவில் அமைக்கவும், பாதயாத்திரைகள் மேற்கொண்டவர். தலைசிறந்த தேசியவாதியான குமரி அனந்தன் அவர்களது மறைவு, தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு."
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும், அக்கா திருமதி @DrTamilisai4BJP அவர்களின் தந்தையாருமாகிய, இலக்கியச் செல்வர், ஐயா திரு. குமரி அனந்தன் அவர்கள், இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த… pic.twitter.com/G9tnTA5UFP
— K.Annamalai (@annamalai_k) April 9, 2025
விஜய்:
"ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்; மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்; தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக நேர்மையுடன் பணியாற்றியவர்.
ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்; மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்;
— TVK Vijay (@TVKVijayHQ) April 9, 2025
தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக…
எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த அய்யா திரு. குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்."