செய்திகள் :

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

post image

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியுள்ளது.

இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதற்காக வக்ஃப் திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்கள் மத்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ளன.

குளிா்கால கூட்டத் தொடா், டிச. 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு அமா்வு செவ்வாய்க்கிழமை (நவ.24) நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சிகளின் திட்டம்

நாட்டில் 2020 - 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபா் கெளதம் அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் சில தினங்களுக்கு முன்னா் குற்றம்சாட்டப்பட்டது.

பிரதமா் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள இந்த விவகாரம், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் வலுவாக எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

இதேபோன்று, மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதால், இந்த விவகாரத்தையும் எதிா்க்கட்சிகள் தீவிரமாக எழுப்பக் கூடும்.

முக்கிய மசோதாக்கள்

இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதற்காக வக்ஃப் திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்கள் மத்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதில், தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க வகைசெய்யும் மசோதா, வா்த்தக கப்பல் போக்குவரத்து மசோதா, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா உள்ளிட்ட 5 மசோதாக்கள் புதியவை. வக்ஃப் திருத்த மசோதா, முசல்மான் வக்ஃப் (ரத்து) மசோதா உள்பட 8 பிற மசோதாக்கள் மக்களவையில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு நிலுவையில் இருப்பவையாகும்.

பாரதிய வாயுயான் விதேயக் உள்ளிட்ட 3 மசோதாக்கள், மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளன. இந்த மசோதாக்கள், பரிசீலனை-நிறைவேற்றத்துக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

உலக செஸ் சாம்பியன்ஷிப்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுப்போட்டி(FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குவதை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்புக் கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. உலகின் பிரப... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்: இருவர் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குத்ரி தொகுதிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

5 டன் போதைப்பொருள்கள் பறிமுதல்: 6 நபர்கள் கைது!

அந்தமானில் 5 டன் அளவிலான போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்த இந்தியக் கடலோரக் காவல்படையினர் 6 நபர்களைக் கைது செய்துள்ளனர். அந்தமான் கடல் பகுதியில் கடலோர காவல்படை டோர்னியர் விமானத்தின் விமானி நவம்பர் 23 அ... மேலும் பார்க்க

மணிப்பூரில் கொல்லப்பட்ட 3 வயது சிறுவனின் தலையில் குண்டு காயம்!! உடல் கூறாய்வில் அதிர்ச்சி

மணிப்பூரில் தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட சிறுவனின் உடல் கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.மணிப்பூரில் மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில், குகி தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட ஒரு குழந்தை மற்று... மேலும் பார்க்க

நாட்டின் நலனுக்காக அல்ல, ஹிந்து-முஸ்லிம் பிளவுக்காகவே அதிகாரம்: சம்பல் குறித்து ராகுல்

புது தில்லி: மத்திய மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில், அரசு அதிகாரத்தை மாநிலங்களில் ஹிந்து-முஸ்லிம் பிளவுக்காகவே பயன்படுத்தப்படுகிறது, மாநில அல்லது நாட்டின் நலனுக்காக அல்ல என்று சம்பல் மோதல் குறித்து ரா... மேலும் பார்க்க

ஆட்சி அமைப்பது குறித்து மகாயுதி கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை: அஜித் பவார்!

மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய அரசு அமைப்பதற்கான சூத்திரத்தை இறுதிசெய்வது குறித்து மகாயுதி கூட்டணி கட்சிகளிடையே விவாதங்கள் நடைபெற்று வருவதாக மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித்... மேலும் பார்க்க