செய்திகள் :

நாடாளுமன்ற வளாகத்தில் காயமடைந்த பாஜக எம்.பி.க்களை நலம் விசாரித்த பிரதமர்!

post image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தள்ளியதால் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை காலை மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், காங்கிரஸுக்கு எதிராக பாஜக எம்பிக்களும் போராட்டம் நடத்தினர்.

இதில், ராகுல் காந்தி தள்ளியதில் பாஜக எம்பிக்கள் பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கினார் கார்கே!

அதேபோல், பாஜக எம்பிக்கள் தன்னை வழிமறித்து மிரட்டியதாக ராகுல் காந்தியும், கீழே தள்ளியதில் முழங்காலில் காயம் ஏற்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கேவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

பிரதாப் சிங் சாரங்கி காயமுற்றது தொடர்பாக பாஜக எம்பி லட்சுமணன் கூறுகையில், ”ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நமது ஒடிஸா எம்.பி.க்கு காயம் ஏற்பட்டது. அம்பேத்கரை காங்கிரஸ் கட்சியும் அவமதித்து வருகிறது. நேருவால் அக்பேத்கர் காங்கிரஸில் இருந்து விலகினார். பிரதமர் நரேந்திர மோடி அம்பேத்கருக்கு உரிய மரியாதையை வழங்கினார்” என்று கூறினார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பூமியைக் கடக்கும் இரண்டு மிகப்பெரிய சிறுகோள்கள்: நாசா எச்சரிக்கை!

ஆஸ்டிராய்டு எனப்படும் மிகப்பெரிய இரண்டு சிறுகோள்கள் பூமியை கடந்து செல்ல இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வருகின்ற டிச.21 ஆம் தேதி அன்று மிகப்பெரிய வீ... மேலும் பார்க்க

ஓடிடியில் புஷ்பா - 2 எப்போது?

புஷ்பா - 2 ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா - 2 . இப்படம் டிச. 5-ல் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர... மேலும் பார்க்க

நிறங்கள் மூன்று ஓடிடி வெளியீட்டுத் தேதி!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவான நிறங்கள் மூன்று திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர்கார்த்திக் நரேன்,அதர்வா முரளியுடன் இணை... மேலும் பார்க்க

வெள்ளி திரை நட்சத்திரங்கள் நடிக்கும் புதிய தொடர்!

சின்ன திரையில் பொதுவாக தொடர்கள் அரை மணி நேரம் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், ஒரு மணி நேரம் ஒளிபரப்பும் புது முயற்சியில் கெட்டி மேளம் தொடர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.பொதுவாக வாரத்தொடர்கள் 1 மண... மேலும் பார்க்க

ஆப்கனில் 2 பேருந்து விபத்துகளில் 52 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இரண்டு வெவ்வேறு பேருந்து விபத்துகளில் மொத்தம் 52 பேர் பலியாகியாகியுள்ளனர். மத்திய ஆப்கானிஸ்தானின் கசினி மாகாணத்தில் தலைநகர் காபுலிலிருந்து கந்தார் நகர... மேலும் பார்க்க